tamilni 36 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

Share

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சுழிபுரத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் பாலசந்திரன் (வயது – 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் மோட்டார் வாகனத்தில் பயணித்த அவர் நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்குள்ளான நிலையில் நிமோனியா காய்ச்சல் மூலம் ஏற்பட்ட கிருமித் தொற்று பரவி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...