7 8
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தேர்தல் களத்தில் போட்டியிடும் இலங்கையின் பிரதமர்

Share

கொழும்பில் தேர்தல் களத்தில் போட்டியிடும் இலங்கையின் பிரதமர்

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் பெரும் வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புள்ள, திறமையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அணியை, களமிறங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஹரினி அமரசூரிய, 2024 ஆம் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...