“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே அவர் பதவி விலக நேரிடும்.”
– இவ்வாறு அபே ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் நான் நினைக்கவில்லை.
பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment