கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமர்சூரிய தலைமையில் நடைபெற்றது.
இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண செயலாளரின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுனர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக்டிறங்கசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள் புத்திஜீவிகள் என பலரது பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
2026ஆம் ஆண்டு முதல் நாட்டின் கல்வி முறையில் குறிப்பாக பாடசாலைக் கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.