6 97
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் அரசு – எழுந்துள்ள கண்டனம்

Share

அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் அரசு – எழுந்துள்ள கண்டனம்

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனனையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...