நடுவானில் விமானிகள் தூக்கம்! -பாதுகாப்பாக விமானம் தரையிறக்கம்

298936627 6337765132917696 3110247735570698635 n

சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் Boeing 737-800 (reg ET-AOB) விமானத்தின் இரு விமானிகளும் நடுவானில் தூங்கிய நிலையில் தன்னியக்க பைலட் (autopilot ) துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் அதன் இலக்கை தாண்டிச் சென்றதால், Alarm ஒலித்த நிலையில் திடீரென விளித்து அவர்கள் 25 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

விமானிகள் தூங்கியபோது, ​​தன்னியக்க பைலட்டில் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததது பின்னர் Alarm ஒலித்த பின்னர் அடிஸ் அபாபா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்புகளை மேற்கொண்டபோதும் முடியவில்லை. எனினும் பின்னர் வட்டமடித்து 25 நிமிடங்களின் பின்னர் அடிஸ்அபாபா விமான நிலையத்தின் ஓடுபாதை 25L இல் விமானத்தை தரையிறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் பகிரங்கமாக கருத்து இன்று தெரிவிக்காவிட்டாலும், விமானியின் சோர்வு குறித்த கவலையை விமானம் எழுப்பியுள்ளது.

விமானப் பகுப்பாய்வாளர் அலெக்ஸ் மச்செராஸ் இதை “ஆழ்ந்த கவலைப்படுவதாக விவரித்தார், விமானியின் சோர்வு சர்வதேச அளவில் “விமானப் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் தொடர்கிறது.

இவ்வாறான நிலையில் இன்று (19) பிற்பகல் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விமானிகளுக்கும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் “விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் பொருத்தமான திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று விமான நிறுவனம் கூறியது, பாதுகாப்பு அவர்களின் முதல் முன்னுரிமையாக தொடரும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Exit mobile version