அரசை விரட்டியடிப்போம்! காலிமுகத்திடலை நோக்கி நகரும் பாத யாத்திரை!

” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (18) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த பாத யாத்திரை நேற்று முற்பகல் 9 மணிக்கு களுத்துறை, பேருவளையில் ஆரம்பமானது.

ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான மக்களும் குறித்த பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த பாத யாத்திரை நாளை கொழும்பை வந்தடையவுள்ளது.

WhatsApp Image 2022 04 18 at 2.08.57 PM

#SriLankaNews

Exit mobile version