இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
#SriLankaNews