கறுப்பு சந்தையில் பெட்ரோல் 3500!!

image eb7a7cee85 1

கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 2,000 முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் பெட்ரோலை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எரிபொருள் பதுக்கி வைத்திருப்பவர்களை கைதுசெய்ய பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version