3 5 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

Share

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

தேசபந்து தென்னகோன் இலங்கையின் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கை பொலிஸ் படையில் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோசன் பாதுக்க மற்றும் குழு உறுப்பினர் ஆனந்த பாலித ஆகியோர் தமது மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளனர்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதியினால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டமை, சட்ட விதிகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பு விதிகளை மீறும் செயலாகும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...