அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி

election

ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version