மக்கள் வங்கியின் கடன் தள்ளுபடி விசேடஅறிவிப்பு !
அண்மையில் சில சமூக வலைத்தளங்களில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பில் மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில சமூக ஊடக வலைத்தளங்களில் மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக , வங்கி நிர்வாகம் கருத்துக்களின் உண்மைத்தனமையை திட்டவட்டமாக மறுப்பதாக கூறியுள்ளது.
அத்துடன் இதனால் எதிகாலத்தில் எழக்கூடிய சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காக, சமூகவலைத்தளங்களில் வெளியான கடன்கள் எதனையும் தள்ளுபடி செய்யவில்லை எனவும் மக்கள் வங்கி கூறியுள்ளது.
#srilankaNews
Leave a comment