8 29
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர்!

Share

எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர்!

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில்,” எமது தலைமைத்துவத்தின் மீதும் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளால் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர்.

அண்மையில் சில எதிர்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தாமல் அதனை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை முன்வைப்பதை செய்திகளில் பார்த்தேன்.

இன்னும் இவர்களால் மக்களிடத்துக்கு சென்று கலந்துரையாட முடியாமல் உள்ளது. இவ்வாறான கோழைகளுக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது வெறும் கனவு மாத்திரமேயாகும்.

இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் அவர்களுக்கு மோதிக்கொள்ள முடியுமா? உண்மையில் அவர்களால் அதனை நினைத்துப் பார்க்க முடியாது.

எமது ஒழுக்க நெறிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியுமா? முடியாது. அவ்வாறு நினைத்து பார்ப்பது வேடிக்கையான விடயமாகும்.

இதன் காரணமாகவே அவர்கள் எமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...