ஹட்டனில் அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்! – வீதிகளை மறித்து போராட்டம்

IMG 20220330 WA0003

ஹட்டன் நகரில் உள்ள பிரதான வீதிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஹட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29.03.2022) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று (29.03.2022) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணிக்கு டீசல் விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், அந்த உறுதி மீறப்பட்டதால் சாரதிகள் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிவருவதுடன், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

#SriLankaNews

Exit mobile version