55 வயதை பூர்த்தி செய்தவர்கள் தாம் விரும்பினால் ஒய்வு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி திகதியின் பின்னர் 55 வயதை பூர்த்திசெய்தவர்கள், தாம் விரும்பினால் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டது. இதன் காரணமாக எதிர்வரும் டிசெம்பர் மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews