mahinda e1655273491290
அரசியல்இலங்கைசெய்திகள்

’21’ இற்கு முன் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்! – மஹிந்த கருத்து

Share

“அரசமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தும் யோசனை 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதற்கு ஆதரவளிக்கும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின்போதே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சிங்கள ஊடகம் ஒன்றிடம் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது.

ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பன பொதுமக்களால் முற்றுகையிட்டப்பட்டு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை வெடித்த தினமான மே 9ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜிநாமா செய்திருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...