தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் பல்வேறு காரணங்களால் விலகிச் செல்வதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் பற்றிய தவறான புரிதல் காரணமாக, மக்கள் மத்தியில் ‘தேசிய மக்கள் சக்திக்கு இருந்த ஆர்வம் ஓரளவுக்குக் குறைந்து வருகிறது.
அதேவேளையில், திசைக்காட்டிக்கு வாக்களித்த மக்கள் விலகிச் சென்றாலும், இதற்கு முன் அவர்களுக்கு வாக்களிக்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து திருப்தி அடைந்துள்ளனர் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.