நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்து விமான நிலையங்களுக்கு அருகில் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் பிரதேசவாசிகள் இன்று காலை தொடக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வழியால் விமான நிலையத்துக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் பரிசோதிக்கும் அவர்கள் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று சோதனையிட்ட பின்னரே அனுப்பிவைக்கின்றனர்.
இதேவேளை, கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மத்தளை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment