போராட்டங்களில் ஈடுபடும் உரிமையும், சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது

sajith 3

” போராட்டங்களில் ஈடுபடும் உரிமையும், சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை சவாலுக்குட்படுத்துவது அடிப்படை மனித உரிமைமீறல் மற்றும் ஜனநாயக விரோதச்செயலாகும் .” – என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, வன்முறையின்றி அறவழியில் போராடியவர்கள்மீது அரசு கைவைக்கக்கூடாது எனவும், அவர்களுக்காக தான் முன்னின்று செயற்படபோவதாகவும் அவர் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயாதீன அணிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித், கைது வேட்டை நிறுத்தப்பட வேண்டும் எனவும் இடித்துரைத்தார்.

#SriLankaNews

Exit mobile version