24 662ab7f6a3793
இலங்கைசெய்திகள்

பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு

Share

பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு

கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர்.

குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் ​போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த ​போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட ​வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...