அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் புலம்பெயர் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இவர் இதனை தெரிவித்தார்.
பயிற்றப்பட்ட பணியாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்புவது ஊக்குவிக்கப்பட வேண்டும். மாறாக வீட்டு வேலைகளுக்கு பெண்கள் செல்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு வெளிநாட்டுக்கு செல்லும் பணியாளர்களின் பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களுக்கான விசேட காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
#SriLankaNews