ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews