24 66262898f1bd6
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டு

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டு\

வவுனியா (Vavuniya) கடவுச்சீட்டு அலுவலகத்தில் (Passport office) இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோசடி விவகாரம் தொடர்பில் மக்கள் மேலும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் (Vavuniya Immigration Department) கடவுச்சீட்டு பெறுவதற்காக வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும்.

காத்திருப்போருக்கு காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதன்போது, வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில், ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...