கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

pass

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று  மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (13) கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போன நபர்களுக்கு இன்று(14) நண்பகல் 12 மணி முதல் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று (13) காலை 10.30 முதல் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை.

நேற்று (13) கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கு  திணைக்களத்தின் செலவில் இன்று(14) தபால் மூலம் கடவுச்சீட்டுகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version