பசறையில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு! – 13 பேர் கைது

Arrested 611631070

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புகளின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், போதை மாத்திரைகளுடன் மூவரும், நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும், பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இருவரும், பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம். விஜயரட்ணவின் வழிகாட்டலின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version