அரசிலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான சுயாதீன உறுப்பினர்கள், (பங்காளிக்கட்சிகள்) மாற்று வெளித்திட்டமொன்றை கையாள தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
புத்தாண்டின் பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களையும் அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாம் இன்று ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் அல்ல; எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அல்ல. நாம் சுயாதீனமாக எமது கருத்துகளை முன்வைத்து அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே நினைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
#SriLankaNews