அரச பங்காளிக்கட்சிகள் – சஜித் சந்திப்பு!

sajith 7567

அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 2 மணிநேரம்வரை நீடித்த இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் குறித்தும், எதிர்கால நகர்வுகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version