வீரியமடையும் பாராளுமன்ற கொவிட் கொத்தணி!

z p01 Parliament

பாராளுமன்றத்தில் மேலும் 38 கொவிட் 19 தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் சமீப காலத்தில் பாராளுமன்றத்தில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

இக் குழுவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பல பிரிவுகளின் ஊழியர்கள் உள்ளனர்.

நேற்று 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெபிட் ஆன்டிஜென் சோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 38 பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இனம்காணப்பட்டனர்.

இதற்கிடையில், இதுவரை 49 எம்.பி.க்கள் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version