நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் ஒன்று இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு வேளை தொடர்பிலும் இதன்போது தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews