இந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி (புதன்கிழமை) மற்றும் 19ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (டிசம்பர் 16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இந்தக் குறிப்பைக் கூறினார்.
பாராளுமன்றக் கூட்டத்தின் நோக்கம் மற்றும் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.