” இது மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றம். எனவே, அது உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.
” நாடாளுமன்றத்தில் தற்போது போலி பெரும்பான்மையே உள்ளது. அதனை வைத்தே இன்று நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கட்சிகளின் அறிவிப்புகளின் பிரகாரம், டலசுக்கு வாக்குகள் கிடைத்திருந்தால் 113 இற்கு மேலான வாக்குகள் இலகுவில் கிடைத்திருக்கும்.
எமது கட்சி உறுப்பினர்கள் கட்சி முடிவுக்கமைய வாக்களித்திருப்பார்கள் என நம்புகின்றோம். அவர்கள்மீது சந்தேகம்கொள்ள வேண்டியதில்லை.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
#SriLankaNews