பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

இந்த வார கூட்டத்தின்போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அமைச்சர் கடந்த காலத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர் என்பதுடன் இதன் காரணமாக அரசின் பிரதானிகளுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டவர் எனக் கூறப்படுகின்றது.

இதனடிப்படையில், இந்த வாரம் நாடாளுமன்றத்துக்குள் மற்றுமொரு சர்ச்சைக்குரிய உரையை குறித்த அமைச்சர் நிகழ்த்தவுள்ளார் எனவும், அது அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version