இலங்கைக்கு கரம்கொடுக்க தயாராகும் பாரிஸ் கிளப்

image f18d1ef75a

இலங்கைக்கான கடன் உதவி குறித்த உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பைத் திறப்பதற்கு இதுவொரு முக்கிய படி என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கான தனது ஆதரவை விரைவில் பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாதவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் சர்வதேச நாணயதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதம் தேவைப்படுகிறது.

நவம்பர் மாதம் முதளீட்டாளர்களுக்கு வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய இலங்கையின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122 சதவீதமாக காணப்படுவதுடன், அதில் 70 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப் அல்லாத உறுப்பினர்களான சீனாவும் இந்தியாவும் இருதரப்பு கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ளதுடன், பாரிஸ் கிளப்பின் உத்தரவாதம் சீனாவை நம்பியிருக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாணய நிதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு இந்தியா முன்னர் உறுதியளித்த நிலையில், சீனாவின் எக்சிம் வங்கியும்  இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதாக அண்மையில் அறிவித்தது.

#SriLankaNews

Exit mobile version