பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 200 தொன் (Tons) அனர்த்த நிவாரணப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலையைச் சமாளிப்பதற்காகத் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

