நாடு முழுவதும் பாதுகாப்பு கடமையில்18 000 காவல்துறையினர்
நாடாளாவிய ரீதியில் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
இதற்காக 18 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் (23) நாளையும் 3,000இற்கும் அதிகமான தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் சுகாதாரத் தரம் தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
Comments are closed.