11,000 கடந்தது கொரோனா சாவு!

covid death

11,000 கடந்தது கொரோனா சாவு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 70 ஆண்களும் 87 பெண்களுமே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 130 பேரும் 30–58  வயதுக்கு இடைப்பட்டோரில் 23 பேரும் 30 வயதுக்கு கீழ்ப்பட்டோரில் 4 பேருமாக மொத்தமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இதுவரை நாட்டில் 11 ஆயிரத்து 152 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version