இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று நிலைமைக்கு மத்தியில் அதனை முகம்கொடுத்து வருகின்ற நாடு என்ற ரீதியில் நாம் பயணித்து வருகின்றோம்.
உலகின் பேண்தகு இலகுக்கு ஏற்ற வகையில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. போர் நிறைவடைந்த பின் அமைதியான மற்றும் சுதந்திரமான சூழல் சுற்றுலாத்துறையின் வேகமான வளர்ச்சிக்கு பங்களித்தது.
எனினும் பின்னரான கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதனால் இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் சவாலை ஏற்றுக் கொண்டு அரசு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சூழலை நிர்மாணிப்பதே அரசின் நோக்கமாகும்.
‘ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை’ என்ற தொனிப்பொருளுக்கு அமைய இம்முறை சர்வதேச சுற்றுலா தினதுக்கு நாம் மிகுந்த ஆர்வத்துடன் ஒன்றிணைவதுடன் நாட்டுக்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமான பயண அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
Leave a comment