“தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம், மாறாக ஆட்சி மாற்றம் அல்ல” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.
“தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீளவேண்டுமெனில் அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசிய கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். 20 ஆண்டுகள் வரை இணைந்து பயணிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” என்றும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டார்.
#SriLankaNewsUN
Leave a comment