சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

24 6629ee781a2a8

சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (25.04.2024) சபைக்கு அறிவித்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Exit mobile version