5 28
இலங்கைசெய்திகள்

ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில்

Share

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் அண்மையில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளதாக நளிந்த கூறியுள்ளார்.

மேலும், ஜகத் குமார 10 இலட்சம் ரூபா, குமாரசிறி 9 இலட்சம், ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம், நாமல் குணரத்ன 10 இலட்சம், தர்மசிறி பண்டா 10 இலட்சம், விதுர விக்கிரமநாயக்க 15 இலட்சம், விமலதீர திசாநாயக்க 30 இலட்சம், லகி ஜயவீர 16 இலட்சம், இராமலிங்கம் சந்திரசேகரன் 14 இலட்சம், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் என்ற அடிப்படையில் நிதி பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 110 இலட்சம் ரூபா, டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

மேலும் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபகச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கமை இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அனுமதி வழங்கினார்.

Share
தொடர்புடையது
25 68308d9c71c6a
இலங்கைசெய்திகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்...

25 68308f63a7a09
இலங்கைசெய்திகள்

ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...