download 26 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊழல்மோசடிகளின் ஓரங்கம்-சபாநாயகர் கடும் அதிருப்தி!

Share
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயற்பாடு, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதியேயாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் 7 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மூன்றரை கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள், ஆபரணங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்தபோது கைதான சம்பவத்தை நாம் மிகவும் பாரதூரமான விடயமாகவே கருதுகின்றோம். இதுகுறித்து விசனமடையும் அதேவேளை, நாடு என்ற ரீதியில் வெட்கப்படவேண்டிய விடயமாகவும் நாம் இதனைக் கருதுகின்றோம்.
‘கௌரவ உறுப்பினர்’ என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தைப் பயன்படுத்திச் செய்திருக்கும் இந்தச் செயலானது, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம். இச்செயலின் விளைவாகக் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம்வகிப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களைப்போன்ற நபர்களின் செயல்களால் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் இந்தச்செயலை வெறுமனே சுங்கச்சட்டத்தை மீறிய செயலாக மாத்திரம் கருதமுடியாது. இதனூடாக நாட்டின் அந்நியச்செலாவணி சட்டங்களும் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்துக் கவனம்செலுத்தவேண்டும். அவ்வாறு மீறப்பட்டிருப்பின், அது பாரிய குற்றமாகும். ஆகையினால் நாட்டின் பொறுப்புடைய தரப்புக்கள் இதுகுறித்துக் கவனம் செலுத்தவேண்டிய அதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி, தராதரங்களைப் பாராமல் சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#srilankaNews

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...