மாலைதீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அங்கும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
மாலைதீவு வந்துள்ள அவருக்கு புகலிடம் வழங்கக்கூடாது என அந்நாட்டிலுள்ள சிவில் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பக்கமே மாலைதீவு நிற்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இடித்துரைத்துவருகின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவு தற்போது வைரவாகியுள்ளது.
#SriLankaNews