8 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவோம்! சஜித் அறைகூவல்

Share

அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ” மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...