ராஜபக்சக்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைவரும் வீட்டுக்கே போய்விடுங்கள்! – ராஜபக்சக்களிடம் எதிரணி வேண்டுகோள்

Share

“பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க வேண்டுமெனில் உறுதியான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும்.

ஊழல், மோசடி மிக்க – ஸ்திரமற்ற அரசை வைத்துக்கொண்டு நெருக்கடி நிலைமைக்குத் தீர்வுகாண முடியாது. அதேவேளை, சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை மென்மேலும் அதிகரிக்கும். எனவே, பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...