திறப்பு விழா காண்கிறது யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம்

20220327 154729 1

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நாளை திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 12.30 மணியளவில் குறித்த பண்பாட்டு மையம் காணொளி முறையில் எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இருப்பினும், யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் நாளைய தினம் எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version