நாட்டில் தற்போது இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாணயக் கடிதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, தற்போது ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது.
எனினும், இறக்குமதிக்கான தடைகளை உடனடியாக நீக்காவிடின், பல அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவும் என ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews