சாணக்கியன்
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

Share

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

“நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவைத் தெரிவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வாக்களித்து, அவரைப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்த 148 பேரும் தற்போதும் ராஜபக்சக்களுடனேயே இருக்கின்றனர்.

எனவே, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடககாரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்சக்களைப் காப்பாற்ற வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...