15 13
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்த பல மில்லியன் ரூபா சேமிப்பு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

Share

அரசாங்கத்திற்கு கிடைத்த பல மில்லியன் ரூபா சேமிப்பு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

கல்வியற் கல்லூரி மாணவர்களின் ஆட்சேர்ப்பு மூலம், சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,”இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா சேமிக்க முடிந்தது.

கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது.

இதேவேளை அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின் அனுமதியுடன் இந்த பணிக்கான முழு தொழில்நுட்ப ஆதரவையும் information institute of Technology வழங்கியுள்ளது.

மேலும் இம்முறை 04 மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடிந்தது.”என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...