யாழில் சமகால நிலை தொடர்பான இணையவழி கலந்துரையாடல்!

IMG 20220601 WA0017

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமகால நிலை தொடர்பான இணையவழி கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றதுடன் பல்வேறு விடயங்கள் அதில் ஆராயப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,2021ம் ஆண்டு நடைமுறைப்படுத்திய வீட்டுத்திட்டம், 2022ம் ஆண்டு காலாண்டில் நிறைவேற்றிய திட்டங்களின் முன்னேற்ற நிலை, தற்போதைய நெருக்கடியில் சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார நிலைமைகளை ஆராய்தல், எரிபொருள், சமையல் எரிவாயு மின்சாரம் மருந்து பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஆராய்தல், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தின் போது இடம்பெறும் பதுக்கலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version