rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் தொடரும் வழிப்பறி கொள்ளை

Share

யாழில் தொடரும் வழிப்பறி கொள்ளை

யாழ்.சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக முச்சக்கர வண்டியில் நேற்றுமுன்தினம் (02.11.2023) பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பிச்சென்றுள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது மட்டுமன்றி பெண் ஒருவர் உட்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....

pujitha 1
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு , உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு...